பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. வணிகர்குல மாணிக்கம் 267 என்று கூறியிருக்கலாம். அப்படிக் கூறியிருந்தால் அந்த வணிகப் பெருமக்கள் யாரும் அதனை நம்பியிருக்க மாட்டார்கள். எனவே, இதனை நன்கு அறிந்த பரம தத்தன் இரண்டாவது வழியை மேற்கொள்ளுகிறான். தன் வீட்டில் நிகழ்ந்த அற்புதத்தை ஒருவரிடமும் கூறாமல் சில நாட்கள் கழித்து வியாபாரம் நிமித்தம் வெளியூர் செல்வதாகச் சொல்லிவிட்டு, நாகப்பட்டினம் வந்து வேறொரு பெண்ணை மணந்து ஒரு மகளையும் பெற்று, தான் வழிபடும் தெய்வமான புனிதவதியாரின் பெயரை வைத்தான். - - சில காலம் கழித்துச் சுற்றத்தார் புனிதவதியாரை அழைத்துவந்து அவனிடம் சேர்ப்பிக்க எண்ணி, நாகை வந்து ஓரிடத்தில் தங்கி, அவனுக்குச் செய்தி அனுப்பினர். வந்த பரமதத்தன் அம்மையார் காலில் குடும்பத்தோடு விழுந்து வணங்கி, "உமது திருவருளால் நலமாக வாழ்கிறேன்’ என்று கூறினான். முதல் மனைவியை வசிங்கும் கணவனைப் பார்த்தும், அவன் பேசிய பேச்சுக்கள் கேட்டும் திகைத்தனர் உறவினர். அம்மையார் வாய் பேசாது ஒதுங்கி நின்றுவிட்டார். மனைவியை வணங்குதற்குரிய காரணத்தைத் தொடக்கத்திலிருந்து கூறிய வணிகன், சுற்றத்தாரைப் பார்த்து, "நீங்களும் இவரை வணங்கி உய்கதி அடையுங்கள்” என்று வேண்டிக்கொண்டான். r