பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சேக்கிழார் தந்த செல்வம் வேண்டிப் பெற்ற வடிவு தம் இல்வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விட்டதை அறிந்த அம்மையார், இறைவனை நோக்கி ஒரு வேண்டுகோளை செய்கின்றார். "ஈங்கு இவன் குறித்த கொள்கை இது : இனி இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து, இங்கு உன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் * பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும்” என்று பரமர்தாள் பரவி நின்றார். - (பெ. பு-1770) இவ்வாறு பேய் வடிவு பெற்றதை மக்கள் எடுத்துக் கூறிய பொழுது, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இறைவன் அறிந்தால் போதும் என்று பேசும் இதே அம்மையார், சுற்றத்தாரின் எதிரே தம்மைத் தெய்வம் என்று கணவன் கூறியதைக் கேட்டு ஏன் வாளாவிருந்தார்? விடை காண்டல் எளிது. எத்துணைப் பெரிய ஆன்மீகத் தொண்டராயினும், பெண் வடிவுடன் கணவனுக்கு மனைவியாக - இருக்கின்றவரை எதுபற்றியும் பேசுகின்ற மரபு, இந்நாட்டு மகளிரிட்ை இல்லை. வாய்திறவாத கண்ணகியும், கணவன் இறந்த பிறகே