பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சேக்கிழார் தந்த செல்வம் தனிச்சிறப்பைச் சுந்தரர் காலத்தில் இருந்தவர்கள் முதல் இன்றுள்ளவர்வரை யாருமே உண்ர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் சேக்கிழார் கண்ணிலும் கருத்திலும் இந்தப் பதிகம் படுகிறது. தாம் நீண்ட காலம் தேடிவந்த ஒன்று இறைவன் அருளால் கிடைத்துவிட்டதாகவே நினைத்து மகிழ்கிறார் சேக்கிழார். சேக்கிழாரைத் தவிர வேறு எந்தத் தமிழ்ப் புலவனும் இந்த உதிரிக் கதைகளை வைத்துகொண்டு ஒரு காப்பியம் செய்ய முனைய மாட்டான் முனைந்திருந்தாலும் அதில் வெற்றி அடைந்திருக்க முடியாது. - சிவனடியார் பட்டியலா? இந்த உதிரி வரலாறுகளில் காணப்படும் அனைவரும் சிவனடியார்கள் என்று சொல்லப்பட்டதால் சிவனடியார்கள் என்ற காரணத்திற் காகவே சுந்தரர் இந்தப் பட்டியலைத் தந்தார் என்று பலரும் நினைந்தனர். சேக்கிழார் ஒருவர்மட்டுமே இதில் கூறப்பட்ட அன்பர்கள் அனைவருக்கும் தாம் எவற்றை வலியுறுத்த வேண்டும் என்று கருதினாரோ, அவை அனைத்தும் இவர்களிடம் ஒருங்கே அமைந்திருந்தன என்ற நுணுக்கமான உண்மையைப் புரிந்துகொண்டார். புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னனுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. தவறுதலாக ஒரு சிவனடியாருக்குத் துன்பம் இழைக்கப்பட்டு விட்டது என்று அறிந்தவுடன் தன் குறிக்கோள்