பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 269 பேச ஆரம்பித்தாள். அம்மையாரும், மனைவி ஸ்தானத்தில் உள்ள இவ்வுடம்பை உதறிவிட்டு, பேய் வடிவு எடுத்த பிறகே பேசத் தொடங்குகின்றார். இறுதியாக, கயிலை சென்ற அம்மையார் இறைவன், அம்மையே! என்று அழைக்க, அப்பா என்று அன்புததும்ப அழைக்கின்றார் என்ன வேண்டுமென்று இறைவன் கேட்க, அம்மையார் மிக விரிவாக தம் வேண்டுதலை வெளியிடுகின்றார். அதைக் கூறவந்த சேக்கிழார், - "இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா! நீ ஆடும் போது உன் . அடியின் கீழ் இருக்க' என்றார். (பெ. பு-1781) என்று பாடுகிறார். அன்பு செய்வது என்பது, ஓர் ஆண்மகனோ, பெண்மகளோ அவரவருடைய மனத்தின் பால் வளர்த்து கொள்ள வேண்டிய பண்பாடும் தம்முடைய முயற்சியால், மனத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டிய அன்பை இறைவனிடம் கேட்பதில் என்ன நியாயம்: மூத்த திருப்பதிகம்,