பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 சேக்கிழார் தந்த செல்வம் அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை, என்ற நூல்களைப் பாடிய இப்பெருமாட்டி தம்முடைய மனத்தில் என்றும் நிலைபேறு உடையதாய், அழியாததாய், இன்பந்தருவதாய் உள்ள அன்பு எப்பொழுதும் சுரக்க வேண்டுமென்று இறைவனைக் கேட்பதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். அன்பே வடிவான இறைவனை, மனத்துள் கொண்டு வருவதற்கு ஒரே வழி, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதன் மூலம் தன் மனத்தில் அன்பை நிரப்பிக் கொள்ள வேண்டும். அப்படியானால் அது எளிதான காரியமன்று. இதற்காகவே இறைவனைப் பார்த்து, என் மனத்தில் அன்பு நிறையுமாறு நீ அருள் செய்க என்று வேண்டுகிறார் பிராட்டி இதற்கு அடுத்தபடியாக அவர் வேண்டுவது, நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அனைத்தையும் தரும் இறைவனிடம், பிறவாமை வேண்டும்; என்று அம்மையார் கேட்பது நியாயமானதா? ஆனால் இவ்வாறு கேட்பதில் ஒரு சிக்கல் உண்டு. இறைவனிடம் அடிமை பூண்ட அம்மையின் விருப்பம் அதுவாகும். ஆனால் ஒரு உயிருக்கு எத்தகைய பிறவியை, எப்பொழுது, எங்கே தரவேண்டும் என்பதை முடிவு செய்கின்ற தலைவன் இறைவன் ஆவான். மற்றோர் பிறவியை அம்மையாருக்குத் தர வேண்டும் என்று இறைவன்