பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 271 நினைத்திருந்தால் அதை அறிந்துகொள்ளாமல் பிறவாமை வேண்டும் என்று கேட்பது அவனைச் சிக்கலில் வைத்து விடும். தாயுள்ளம் கொண்ட இப் பெருமாட்டியார் இதனை நன்கு அறிந்தவர் ஆதலின், "ஐயா! என்ன வேண்டுமென்று நீ கேட்டாய்? பிறவாமை வேண்டுமென்று என் விருப்பத்தைக் கூறிவிட்டேன். ஆனால், உன்முடிவு என்னவென்று தெரியாமல் நான் கேட்டுவிட்டேன். ஒருவேளை மற்றொரு பிறப்பை எனக்குத் தரவேண்டும் என்று நீ திருவுளம் பற்றினால், அதையும் முழுமனத்தோடு ஏற்றுக் கொள்கிறேன். அப்படி ஒருவேளை, மற்றொரு பிறப்பைத் தந்தால், அப்பிறவியிலும் நின்பால் அன்பு நிறைந்திருக்கும் ஒரு தன்மையை எனக்குத் தர வேண்டும்’ என்று மிக அற்புதமாகக் கேட்டுவிட்டு, இறுதியாக ஒரு வேண்டுகோள் வைக்கின்றார். இந்த அடியார்கள், கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி, விடும் வேண்டாதவர்களாயிற்றே. பிறவாமை வேண்டும் என்று கூறியவுடன் ஒருவேளை வீட்டுலகத்திற்கு அனுப்பிவிட்டால் அவனை ஓயாது கண்டுகொண்டிருக்கும் வாய்ப்பில்லாது போய்விடும். எனவே, கூடும் அன்பினில் கும்பிட்டுக்கொண்டே இருப்பதற்கு ஒரு வரம் கேட்டுக்கொள்கிறார். "அறவா! நீ ஆடும் போது நான் மகிழ்ந்து பாடி, உன் அடியின்கீழ் இருக்க வேண்டும் என்பதே அந்த வரமாகும்.