பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272, சேக்கிழார் தந்த செல்வம் எங்கும் திருவடியின்கீழ் கி.பி.56ஆம் நூற்றாண்டுமுதல், 12ஆம் நூற்றாண்டு முடியக் கிழக்குக் கடற்கரைப் பட்டினங்களாகிய நாகப்பட்டினம், காரைக்கால் என்ற ஊர்களிலிருந்து கிழக்காசிய நாடுகளாகிய சயாம், இந்தோனேஷியா முதலிய இடங்கட்கு வாணிபம் செய்யச் சென்ற தமிழர்கள் எழுபதுக்கும் மேற்பட்ட சிவன் கோவில்களை அப்பகுதிகளில் கட்டியுள்ளனர். இக்கோயில்களில் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஏறத்தாழ எல்லாக் கோயில்களிலும் ஆனந்த நடனமிடும் அம்பலவாணன் சிலையின் துரக்கிய திருவடியின் கீழே, எலும்புருவாக ஒரு பெண் சிலை அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். வாணிப நிமித்தம் கடல் கடந்து சென்றாலும், தங்கள் நாட்டின் வழிபடு தெய்வமான காரைக்கால் அம்மையாரை இவர்கள் மறக்கவே இல்லை. போகுமிடமெல்லாம் தங்கள் வழிபடு தெய்வத்தை அழைத்துச் சென்று அங்கும் நிறுவியுள்ளார்கள் என்பதை அறிய, அம்மையாரின் சிறப்பு ஈடு இணையற்றது என்பதை அறிய முடியும். ॐ ॐ ॐ ॐ ॐ