பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அரிந்து ஊட்ட முயன்றவர் முற்றும் துறந்த பட்டினத்துப் பிள்ளைகூடப் பெரியபுராணத்தில் வரும் மூன்று வரலாறுகளில் ஈடுபடுகிறார். கண்ணப்பர், திருநீலகண்டர், சிறுத்தொண்டர் ஆகிய மூவருடைய வரலாற்றிலும் தம் மனத்தைப் பறிகொடுத்த பட்டினத்துப்பிள்ளை, இவர்கள் செய்யும் எந்தச் செயலையும் நான் செய்ய முடியவில்லையே, அப்படியிருக்க, நான் எப்படிக் காளத்திநாதருக்கு ஆட்பட முடியும்?' என்று கேட்கிறார் என்றால், இம் மூவரிடத்திலும் ஏனையோரிடத்தில் காணப்படாத ஏதோவொரு தனித்தன்மை இருக்கவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. - சிறுத்தொண்டருடைய செயல் சாதாரண மனித நிலையில் நினைக்கக்கூட முடியாத ஒன்றாகும். குறிக்கோளும் கடமையும் முன்னர்க் கூறியபடி ஒரு குறிக்கோள் அவருடைய வாழ்வில் இருந்துவந்தது. பல்லவ சேனாபதியாக இருந்த அவர், அப்பதவியை உதறிவிட்டுச் சிவத் தொண்டும் மக்கள் தொண்டும் செய்வதற்காகவே திருச்செங்காட்டாங்குடியில் வந்து தங்கினார். எல்லையற்ற இறையன்பின் அடிப்படையில் ஒரு