பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 சேக்கிழார் தந்த செல்வம் குறிக்கோளைக் கொண்டிருந்தார் அவர் பார்க்கப் போனால், அதனை மிக எளிதான குறிக்கோள் என்றுதான் சொல்ல வேண்டும். அன்றாடம் தாம் உண்பதற்குமுன் சிவனடியார் ஒருவரையோ அன்றிப் பலரையோ வரவேற்று அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த உணவை அவர்களுக்கு அளித்து, அவர்கள் உண்டு மகிழ்ந்தபின்னரே தாம் உண்பது என்ற பழக்கத்தை வைத்திருந்தார். மிகு வசதி படைத்தவர்கள், தினந்தோறும் ஒரு சில அடியார்கட்கு உணவு பட்ைத்துவிட்டுத்தான் தாம் உண்பது என்ற குறிக்கோள் வைத்திருந்தால் அதில் வியப்பதற்கொன்றுமில்லை. பல்லவ சேனா பதியாக இருந்த பரஞ்சோதியார் என்ற தனி மனிதர் அடியார்க்குச் சோறிடுதலைக் குறிக்கோளாக கொண்டிருத்தலில் வியப்பு ஒன்றுமில்லை. இது இப்படியே நடைபெற்று வந்திருந்தால், அவர் இறுதி வரை பரஞ்சோதியாக இருந்திருப்பாரே தவிரச் சிறுத்தொண்டராக மாறியிருக்க முடியாது. இந்த மாற்றம் நிகழ ஒரே காரணம் தம்மிடம் இருப்பதை அடியார்கட்கு உணவாகப் படைத்தார் என்று இல்லாமல், அடியார் எவற்றை வேண்டினார்களோ அவற்றை எப்பாடு பட்டேனும் so. சேகரித்து அவர்களுக்குத் தந்ததனாலேயே அவர் சிறுத் தொண்டர் ஆனார். அடியார் எது கேட்டாலும்தம்மையை கேட்டாலும்-மறுக்காமல் தருவதே இந்த அடியாரின் குறிக்கோள்களாகும். இந்த நிலையில்