பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிந்து ஊட்ட முயன்றவர் 275 வடதேசத்து பைராகி வடிவில் வந்த அடியார் மெள்ள மெள்ளத் தம் கருத்தைக் கூறியபொழுதும் சிறுத்தொண்டர் அதனை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். பல்லவ மன்னன் இராஜசிம்மனுக்குச் சேனாபதியாக இருந்து, இரண்டாம் புலிகேசி எனப்படும் விக்கிரமாதித்தனைத் துரத்திக்கொண்டு சென்று, அவன் தலைநகராகிய வாதாபியையே அழித்தவர். எனவே, ஒரு மனிதனை வெட்டுதல் முதலிய செயல்கள் அவருக்குப் புதியன அல்ல. தம் நாட்டுப் பணிக்காகப் பிற மனிதர்களை வேற்று நாட்டவரைக் கொல்லுதலைத் தம் கடமை என்றும் குறிக்கோள் என்றும் கருதி அப்பணியைச் செய்தவர் பரஞ்சோதியார். எந்த நிலையிலும் குறிக்கோள், கடமை என்பவற்றிலிருந்து திறம்படச் செயலாற்றிய பரஞ்சோதிக்குப் புதிய சோதனை வருகிறது. - சேனாபதியாக இருந்த பொழுது நாட்டைக் காத்தலே குறிக்கோள், பகைவரைக் கொல்லுதல் கடமை. பதவிகளையெல்லாம் துறந்து, செங்காட்டங் குடியில் தங்கியபிறகு குறிக்கோள், கடமை என்ற இரண்டும் அப்படியே இருந்தாலும் அவற்றின் உள்ளிடு மாறிவிட்டது. இங்கே குறிக்கோள் என்பது, சிவத் தொண்டும் அடியார் தொண்டும் ஆகும். கட்டமை என்பது, சிவனடியார்கள் எதை விரும்பினாலும், அதை எப்படியாவது அவர்களுக்குத்