பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 சேக்கிழார் தந்த செல்வம் தருவது என்பது ஆகும். அரசுப் பணியில் கடமையை நிறைவேற்றும் பொழுது, பகைவர்கள் பலம் பொருந்தியவர்கள், நம்மால் அவர்களை வெல்வது அரிது’ என்ற எண்ணம் ஒரோவழித் தோன்றியிருப்பின், அந்த உணர்ச்சிக்கு இடம் கொடாமல் மேலும் மேலும் முன்னேறிச் செல்வ கடமையாகும். சிறுத்தொண்டராகிவிட்ட நிலையில், இந்தக் கடமையின் உள்ளீடு மாறிவிட்டதே தவிர, அதன் அடிப்படை இலக்கணம் மாறவில்லை. அடியார் வேண்டுவது, சாதாரண மனிதர்கள் செய்யக் கூடியது அன்று. நர மாமிசம் உண்பது, என்பது நாகரிகம் உடைய மக்கள் மத்தியில் இல்லாத ஒன்று என்றெல்லாம் நினைத்து, அவர் கடமையை விட்டு விடத் தயாராக இல்லை. இந்த அடிப்படையை நன்கு புரிந்துக் கொண்டால்தான் சிறுத்தொண்டர் செய்த செயல்களின் தத்துவத்தையும் நோக்கத்தையும் தியாகத்தையும் புரிந்துகொள்ள முடியும். சத்திரியனாகப் பிறந்துவிட்ட ஒருவன், போர்க் களத்தில் அண்ணன் என்றோ தம்பி, என்றோ குரு என்றோ பார்ப்பது சரியன்று. பகை என்று வந்து விட்ட பிறகு, பகைவர்கள் யாராக இருப்பினும் அவர்ளை எதிர்த்துப் போரிடுவதே கடமையாகும் என்று பேசும் கீதையின் கர்மயோக அடிப்படையை