பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிந்து ஊட்ட முயன்றவர் : 277 ஆழ்ந்து சிந்தித்தால், சிறுத்தொண்டர் செய்தது அத்தகையதே என்பதே அறிந்துகொள்ள முடியும். சிறுத்தொண்டரின் தொண்டு, தியாகம் என்பவை ஈடு இணையற்றவை என்றாலும், ஒரு சில மணி நேரங்களில் முடிந்துவிட்ட செயலாகும். அடியாரிடம் கேட்டதிலிருந்து, வீட்டிற்கு வந்து மனைவியிடம் அதனைத் தெரிவிக்கின்ற வரை, சிறுத் தொண்டர் மனத்தில் போராட்டம் நடந்திருக்க இடமுண்டு. கடமை உணர்ச்சிக்கும் பிள்ளைப் பாசத்திற்கும் இடையே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்லவ சேனாபதியின் அறிவு மிக வேகமாகத் தொழிற்படுகிறது. எதிரி எதிர்பாராத முறையில் வியூகம் அமைத்துச் சில உத்திகளைக் கையாண்டு, தம் கடமைகளை நிறைவேற்றியவர் அவர். பைராகி படிப்படியே இட்ட நிபந்தனைகள் அதேபோல இப்பொழுதும் ஏதாவது செய்ய முடியுமா என்று அவர் உள் மனத்தில் ஒரு பெரிய போராட்டம் நிகழ்கிறது. பைராகி வேடத்தில் இருந்தவன், தன் விருப்பத்தை ஒரு வாக்கியத்தில் கூறாமல் ஒன்று ஒன்றாக, நிறுத்தி, மெள்ள மெள்ளக் கூறுகிறான். 1. நாம் பசு உண்போம். 2.நாம் உண்ணும் பசு நரப்பசுவாகும். 8.அப்பசு ஐந்து வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். 4.உடல் உறுப்புக்களில் எவ்விதக்