பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 சேக்கிழார் தந்த செல்வம் குறையும் இருக்கக்கூடாது என்று இந்த அளவில் பைராகி நிறுத்தியிருந்தால் சிறுத்தொண்டர் வியூகம் எளிதாக முடிந்திருக்கும். அந்த வியூகத்தைச் சிறுத்தொண்டரே தம் மனைவியிடம் எடுத்துக் கூறுகிறார். "நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் (பிள்ளையை) தருவார் உளரே (பெ. பு-8720) சேனாபதியின் மனத்தில் தோன்றிய இந்த வியூகத்தை வந்த பைராகி எளிதில் உடைத்துவிடுகிறான். எனவே அவன் மேலே கூறியவை போக இன்னும் சில நிபந்தனைகள்(Conditions) போடுகிறான். அவையாவன, 5.நல்ல குடியில் ஒரே மகனாகப் பிறந்திருக்க வேண்டும். 6.அந்தப் பிள்ளையைத் தாய் பிடித்துக்கொள்ள வேண்டும். 7.தந்தை அரிய வேண்டும். 8இந்நிகழ்ச்சி நடைபெறும்பொழுது இந்த மூன்று திறத்தாரும் (தாய், தந்தை, பிள்ளை) மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். 9.அப்படி அரியப்பட்ட பிள்ளைக் கறியை சமைக்கும் பொழுது மனத்தில் குழப்பமோ வருத்தமோ இன்றிச் செம்மையாகக் கறி சமைக்க வேண்டும் - பணம் கொடுத்து யாரேனும் பெற்றெடுத்த குழந்தையைப் பெற்று அடியாருக்கு அமுது படைக்கலாம் என்ற சிறுத்தொண்டரின் மனத்தில் எழுந்த வியூகத்தை - உடைப்பதற்காகவே பைராகி கூறும் பின்னைய ஐந்து நிபந்தனைகளும் தோன்றியவை ஆகும். மாபெரும் வியூகங்கள் வகுத்து, சாளுக்கிய விக்கிர மாதித்தனை வென்ற