பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிந்து ஊட்ட முயன்றவர் : 279 பரஞ்சோதியாரை இந்த ஐந்து போடுவதன்மூலம், சேனாபதியின் வியூகத்தை உடைத்து வென்றுவிடுகிறான் பைராகி. அதனைக் கூறுகின்ற பைராகி, "தாதை அரிய” என்று சொல்வதின் மூலம் மிக அற்புதமான ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறான். "சிறுத்தொண்டா! உன் மகனை நீ அறுக்கும் பொழுது அது வன்கண்மை உடைய செயலாக இருத்தலாகாது. பூசணிக்காயையும் வாழைக்காயையும் சமையலுக்கு அரியும்பொழுது எப்படி ஓர் உணர்ச்சியில்லாமல் அரிகின்றாயோ அதேபோன்ற மனநிலையுடன் பிள்ளையை அரிய வேண்டும்” என்ற கருத்தைப் பைராகி தெரிவித்து விடுகின்றான். பெற்ற பிள்ளையை பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் பலரும் அறிந்தவை ஆகும். பைராகி கூறிய அனைத்தையும் சிறுத் தொண்டர் விருப்பத்தோடு, அன்போடு செய்தாரா? அன்றித் தம் குறிக்கோள், கடமை என்ற இரண்டிற்காக விருப்பு, வெறுப்பின்றி இதனைச் செய்தாரா என்ற வினாவை எழுப்பினால், விடை கூறுவது.கடினம் தான் பெற்ற பிள்ளையைப் பலியிடாமல் வேறு வழியில் இதனை நிறைவேற்ற முடியுமா என்று சிறுத்தொண்டரும் அவரருடைய மனைவியாரும் சிந்தித்தனர் என்பதில் ஐயமில்லை.