பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 சேக்கிழார் தந்த செல்வம் அவர்களுடைய மனநிலையைச் சேக்கிழாரின் பாடல் நன்கு விளக்குகிறது. பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒருகுடிக்கு வரும்.அச் சிறுவன்தனைப் பெறுமாறு எவ்வாறு? -- (பெ. பு-379) என்ற வினாவை எழுப்பியவர் அம்மையார் இவ்வினாவிற்கு விடை கூறவந்த சிறுத்தொண்டர் பின்வருமாறு பேசுகிறார்: மனைவியார் தம்முகம் நோக்கி மற்றுஇத் திறத்து மைந்தர்தமை நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர்நின்று தனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாமே எனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை அழைப்போம் யாம்' என்றார். . - (பெ. பு-3720) தமக்கு ஒரு பிள்ளை இருக்கிறான் என்பதை மறந்துவிட்டு, பிள்ளையைப் பெறுமாறு எங்ங்ணம் என்று ஒரு தாய் நிலையில் நின்று திருவெண்காட்டு நங்கை கேட்டது நியாயமே ஆகும். அதற்குச் சிறுத்