பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிந்து ஊட்ட முயன்றவர் 281 தொண்டர் கூறிய விடை சிந்திக்கத் தக்கதாகும். 'நினைவு நிரம்ப நிதி கொடுத்துப் பிள்ளையைப் பெறலாம் என்றாலும், அப்பிள்ளையின் தாய், தந்தையர் அப்பிள்ளையை அரியமாட்டார்கள் என்ற உலகியலை நன்கு அறிந்திருந்தார் சிறுத் தொண்டர் என்பதை முதலிரண்டு அடிகள் விளக்குகின்றன. தாய் மறுத்திருந்தால் இப்பொழுது தாம் பெற்ற பிள்ளையைத்தான் கறி சமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார் சிறுத்தொண்டர். ஆனால், தந்தை என்ற முறையில் அவர் எடுத்த முடிவைப் பெற்ற தாய் ஏற்றுக் கொள்வாளா என்ற ஐயம் அவர் மனத்தில் நிழலாடியது என்பதை அறிய முடிகிறது. இதனைச் சொல்லி, அத்தாய் மனம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் விளைவு விபரீதமாகிவிடும். போர்த் தந்திரத்தில் நுண்மையான அறிவும், வியூகம் அமைக்கும் கூர்மையும் உடைய சிறுத்தொண்டர் மனத்தில் பெற்ற தாய் அதனை ஏற்றுக் கொள்வாளா என்ற ஐயம் தோன்றியவுடன் தமது வியூகத்தையே மாற்றிவிட்டார். அடியார் அமுதுசெய்ய நம் மகனைக் கறி சமைக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அம்மையார் அதனை மறுக்க வாய்ப்புண்டு. அவர்கள் விரும்பும் முறையில் அடியாருக்குச் சோறிடும் கடமையும் குறிக்கோளும் சிறுத் தொண்டருக்கே அன்றி அவர் மனைவிக்கு அன்று.