பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 சேக்கிழார் தந்த செல்வம் எனவே, தம் பிள்ளையைத் தரத் தாய் மறுத்திருந்தால் அவரைக் குறைகூற முடியாது. தம் குறிக்கோளிலிருந்தும் கடமையிலிருந்தும் அத் தாய் தவறிவிட்டாள் எனக் குறை கூறமுடியாது. காரணம், இத்தகைய குறிக்கோளையோ கடமையையோ அவர் மேற்கொள்ளவில்லை. - மனைவியாருக்கு இத்தகைய எண்ணம் எங்காவது மனத்தில் தோன்றியிருந்தால், அதனைப் போக்க வேண்டும் என்று சிறுத்தொண்டர் அறிவு கூறுகிறது. ஒரு விநாடி சிந்தனைக்குப் பிறகு எதனைக் கூறினால் ԼԶՈ/ பேச்சில்லாமல் மனைவி தம் கருத்தை ஏற்றுக் கொள்வாள் என்பதை அறிந்துகொண்டார் சிறுத் தொண்டர். ஒரு கற்புடைய மனைவியைப் பொறுத்த மட்டில் அவர் மனத்தில் பிள்ளைப் பாசம் மிக மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால், கற்புடைய மனைவிக்குக் கணவனை விடுவதா அன்றி மகனை விடுவதா என்ற வினாத் தோன்றுமேயானால் அவள் முடிபு மகனை விட்டுக் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் இருக்கும் என்பதை அறிந்துகொண்டார். சிறுத் தொண்டர். அற்புதமான இரண்டு சொற்களை எடுத்த எடுப்பில் கூறுகிறார். சிவனடியார் அமுதளித்தல் கடமை என்ற எதனையும் வலியுறுத்தாமல், சிறுத்தொண்டர் பேசுவது அவரது அறிவின் எல்லைக்குச் சான்றாகும். மனைவியைப் பார்த்து, "எனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை