பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிந்து ஊட்ட முயன்றவர் * 283 அழைப்போம் யாம்’ என்று கூறி முடிக்கிறார். 'எனை இங்கு உய்ய’ என்ற சொற்களுக்கு, நான் பிழைக்க வேண்டுமானால்’ என்பது பொருளாகும். அதாவது, நான் உயிரை விடாமல் வாழவேண்டும் என்றால், அந்த வாழ்வைத் தருவதற்குரிய நீ பெற்ற பிள்ளையை நாம் இருவரும் அழைப்போம் என்று கூறுவது நம் சிந்தனையைத் துண்டுவதாகும். நான் உய்கதி பெறுவதற்காகவே நீ பெற்ற பிள்ளை என்று கூறுமுகத்தால் மனைவியை ஒரு முடிவுக்கு வருமாறு செய்துவிடுகிறார். நீ பயந்தான் தன்னை என்று கூறும்பொழுது, அந்தப் பிள்ளையினிடத்துத் தந்தையை விடத் தாய்க்கு உரிமை அதிகம் என்பதைக் குறிப்பாக உணர்த்தினாராயிற்று. இறுதியாக, அழைப்போம் யாம் என்று கூறுவதால் மகனை அழைக்கும் கொடுமையை, அத் தாயோ தாமோ தனியே செய்யாமல், நாம் இருவருமே அழைப்போம்” என்று தன்மைப். பன்மை வினைமுற்று ஆக்கிக் கூறி முடித்தார். இதுவரை நிகழ்ந்த நிகழ்ச்சிகளை ஒரு கண்ணோட்டமிட்டால் எந்த அடிப்படையில் இந்தத் தியாகத்தைச் செய்யத் துணிந்தார் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். வேறு வழி இல்லாத பொழுது தான் - அடியார் கேட்டபொழுதே அவர் கூறிய ஒன்பது பொருத்தமாகத் தம் மகன் இருக்கிறான் என்பதைச்