பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 சேக்கிழார் தந்த செல்வம் சிறுத்தொண்டர் ஏனோ சிந்திக்கவில்லை. வேறு வழிகளை ஆராய்ந்து, இயலாதபொழுதுதான் இம்முடிவுக்கு வந்தார் என்பதை தெய்வச் சேக்கிழார் மேலே கூறப்பட்ட இரண்டு பாடல்கள்மூலம் தெரிவித்துவிடுகிறார். . - - நீரோ பெரிய சிறுத்தொண்டர்’ அடியார் கேட்கும் உணவை, அது எத்தகையதாக இருப்பினும், மனமுவந்து செய்யும் மனநிலையில் திருத்தொண்டார் இருந்தார் என்பதில் ஐயமில்லை. ஆனால், அத்தொண்டின் அடிப்படையில் 'அடியார்கள் கேட்டதை நான் செய்கிறேன்’ என்ற எண்ணம் இருந்திருக்கும்போலும், அதனால்தான். பைராகியார் சிறுத்தொண்டரைப் பார்த்ததிலிருந்து, அவரைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, நீரும் என்னோடு உண்ணலாம்’ என்று சொல்கின்றவரை, அவரைத் தலையில் தட்டிக் கொண்டே வருவதை அப்புராணத்தைப் படிப்பவர்கள் அறியாமலிருக்க முடியாது. ஒருவரை முதல் முறையாகப் பார்க்கும்பொழுது, "ஐயா! நீதானா அந்தப் பெரிய மனிதன்” என்று கேட்பது மிக்க அவமரியாதை செய்வதாகும். அதே போல்ப் பைராகியார், சிறுத்தொண்டரைப் பார்த்தவுடன், "நீரோ, பெரிய சிறுத்தொண்டர்' என்று தொடங்குகிறார்.