பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிந்து ஊட்ட முயன்றவர் 285 பைராகி கொடுமைப் பேச்சு ஏன்? இறுதிக் கட்டத்தில், தம்மை உண்பிப்பதற்காகச், சிறுத்தொண்டர் ஒரு வாய் சோற்றை வாயில் போட முனைந்தபொழுது, பைராகியார் பேசும் பேச்சு மிகக் கொடுமையானது. - "ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது சோறு நாளும் உண்பீர் முன் . உண்பது என்? --” (பெ. பு-3743) இவ்வாறு கூறும் கொடுமையை நினைக்கும்பொழுது, நம்மையும் அறியாமல் பைராகியார்மேல் சினம் பொங்குகிறது. நினைத்தற்கரிய தியாகம் செய்த ஒருவரைப் பாராட்டாமல் விட்டாலும் சரி, இப்படிக் கொடுமை பேச வேண்டுமா என்ற வினா நம் மனத்தில் எழுவது நியாயமே. . புறத்தே இருந்து, சிறுத்தொண்டர் செயலைப் பார்க்கின்ற நமக்கு அது நம் கற்பனைக்கெட்டாத மாபெரும் தியாகம் என்ற நினைவை உண்டாக்குவது உண்மைதான். ஆனால், ஒவ்வொருவர் உயிரிலும் கரந்து நின்று அவர்கள் ஆழ்மனத்தில் ஒடும் எண்ணங்களை அறியும் இறைவன், அவர்கள் புறத்தே செய்யும் செயலில் ஈடுபடுவதில்லை. இதே செயல்கள் அகங்கார, மமகாரங்கள் அற்றவர்கள் செய்தால் அது