பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 சேக்கிழார் தந்த செல்வம் வேறு. அத்தகையவர்கள் தியாகத்தை உடனே இறைவன் ஏற்றுக்கொள்கிறான். - சிறுத்தொண்டரைப் பொறுத்தமட்டில் நிலைமை வேறாக இருந்தது. அவரையும் அறியாமல் அகங்காரத்தின் சில வேர்கள் அவரது ஆழ்மனத்தின் அடியில் புதைந்து நின்றன. அது இன்னும் நீங்க வில்லை என்பதைத் தெய்வச் சேக்கிழார் மிக துணுக்கமாக எடுத்துக்காட்டுகிறார். "மைந்தனை அழைத்துவந்தால்தான் நாம் இந்த வீட்டில் உண்ண முடியும்” என்று அடியார் சொன்னவுடன், கணவனும் மனைவியும் பிள்ளையை வாயிலில் நின்ற சிறுத் தொண்டரும், அவர் மனைவியாரும் பிள்ளையை அழைக்கின்றனர். வையம் நிகழும் சிறுத்தொண்டர் "மைந்தா வருவாய்.” என அழைத்தார் தையலாரும் தலைவர் பணி தலைநிற்பாராய்த் தாம் அழைப்பார் "செய்ய மணியே! சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஒலம் இட. (பெ. பு-3745) இப்பாட்டை மேலோட்டமாகப் பார்த்தால் சிறுத் தொண்டர், மகனே! வா! என்று அழைத்தார்’ எனப் பொருள்படும். இதில் தவறு என்ன என்று நினைக்கத் தோன்றும். மைந்தா! என்ற சொல்லில்தான் தவறு