பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிந்து ജL முயன்றவர் 287 வெளிப்படுகிறது. தமக்குள்ள ஒரே பிள்ளையைத் தாமே அரிந்து கறி சமைத்துவிட்ட பிறகு, மைந்தா!' என்று அழைத்தால் அவரது அகமனத்தில் உள்ள என்பிள்ளை' என்ற மமகாரம் நீங்கவில்லை என்பதே பொருளாகும். தொண்டரைவிட மனைவியார் உயர்ந்தவர் ஆனால், அவருடைய மனைவியார் இவரைவிடப் பன்படங்கு வளர்ந்துவிட்டவர் என்பதை இரண்டு அடிகளால் சேக்கிழார் பெருமான் உணர்த்துகிறார். அந்த அம்மைார் அழைக்கும் பொழுது, 'நான் அழைக்கின்றேன்’ என்ற அகங்காரமோ என்பிள்ளை என்ற மமகாரமோ, இல்லை. அதனை அறிவுறுத்தவே சேக்கிழார் பெருமான், தையலாரும் தலைவர் பணி தலைநிற்பாராய்த் தாம் அழைப்பார். என்று கூறுவதன்மூலம் அம்மையார், தமக்கென்று ஒரு செயல் இல்லாதவராக-சிவனடியார் கட்டளையை நிறைவேற்றும் ஒரு ஏவலராக-பணி புரிகின்றார் என்பதனைக் கவிஞர்பிரான் குறிக்கின்றார். பையன் வருவதால் மகிழ்ச்சியோ வாராமையால் துயரமோ அவர் மனைவிக்கு இல்லை. "சிவனார் அடியார் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார். ’ என்று அம்மையார் கூறுவதால், தலைவர் பணியை நிறைவேற்றும்