பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காழிப்பிள்ளையாரும் காளத்தி வேடனும் காளத்திவேடன் என்ற பட்டினத்துப்பிள்ளையின் தொடர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய கண்ணப்பரைக் குறிக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப் பெருமானின் நீண்ட வரலாறு பலருக்கும் தெரிந்திருக்கும் ஆதலின், அவ்வரலாற்றை விரிப்பதை விட்டு விட்டுச் சேக்கிழார் பாடிய முறையில் சில நுட்பங்களை மட்டும் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பிள்ளை பாதி, புராணம் பாதி பெரியபுராணத்தில் உள்ள அறுபத்து மூன்று வரலாறுகளில் இரண்டு வரலாறுகள் தனித்து நிற்கும் சிறப்புடையவை. அவையாவன திருஞானசம்பந்தர் வரலாறும் கண்ணப்பர் வரலாறும் ஆகும். தேவாரம் பாடிய மூவருடைய வரலாறும் பெரியபுராணத்தில் இருந்தே அறியப்படுவனவாகும். இந்த மூவருடைய எல்லையற்ற சிறப்பில் ஈடுபட்டு அப்பெருமக்களிடம் பக்தி பூண்டு அவர்கள் வரலாற்றைச் சேக்கிழார் பாடியுள்ளது உண்மைதான். இம் மூவருள்ளும் திருஞானசம்பந்தர் வரலாறு மிக விரிவாக-பிள்ளை பாதி, புராணம் பாதி’ என்று சொல்லுகின்ற அளவிற்கு-விரிந்துள்ளதும் உண்மைதான். பதினாறு ஆண்டுகளே வாழ்ந்து இறையடி சேர்ந்த ஆளுடைய பிள்ளை வரலாற்றை இவ்வளவு விரிவாகத் தெய்வச்