பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 293 நெக்குருகப் பாடும் வள்ளலார், திருஞான சம்பந்தரைப்பற்றிப் பாடும்பொழுது மட்டும் அச்சங்கலந்த பக்தியுடன், குருவின் எதிரே அடங்கி நிற்கும் சீடனைப்போலப் பாடுவதைக் காணமுடியும். எனவே, பெரியபுராணத்தில் காழிப்பிள்ளையார் வரலாறு தனித்தன்மை வாய்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே அக்கருத்தை ஓரளவு விவரித்து கூறியுள்ளோம். .” * முற்றிலும் மாறுபட்டது கண்ணப்பர் வரலாறு, காழிப்பிள்ளையின் வரலாற்றோடு முற்றிலும் மாறுபட்டதாகும். வைதிகக் குடும்பத்தில் பிறந்தவர் பிள்ளையார். கொல், எறி, குத்து, வெட்டு என்ற சொற்களையல்லாமல் வேறு எச்சொல்லையும் அறியாத வேடுவர் குலத்தில் தோன்றியவர் திண்ணனார். எல்லாக் கலைகளையும் ஒதாது உணர்ந்தவர் பிள்ளையார் கலை என்ற சொல்லையே அறியாது வளர்ந்தவர் திண்ணனார். மூன்று வயதிலேயே பரம்பொருளின் இயல்பை அறிந்து, தெளிந்து, உணர்ந்து அதனைப் பாடலாக இயற்றி, பிறருக்கும் உணர்த்தும் பேராற்றல் பெற்றவர் பிள்ளையார், பதினாறு வயதுவரை இறைவன், சிவ பெருமான் என்ற சொல்லையே காதால்கூடக் கேட்டறியாதவர் திண்ணனார். இத்துணை மாறுபாடுகள் இருந்தும் இருவ்ரும் ஒரே நிலையில் உள்ளனர் என்பதைச் சேக்கிழார் மிக நுணுக்கமாகத்