பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 . சேக்கிழார் தந்த செல்வம் தெரிவிக்கின்றார். காழிப்பிள்ளையார் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு காளத்திக்குச் சென்றபொழுது, திண்ணனாரின் வரலாறு முழுவதுமாக அப்பெருமானின் மனத்திரையில் நிழலாடுகின்றது. வேயனைய என்று தொடங்கும் பாடலில், "வாய்கலசமாக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகுநயனம் காய்கணையினால் இடந்து ஈசனடிகூடு காளத்தி - மலையே' (திருமுறை: 3-69-4) எனப் பின்னிரண்டு அடிகளில் கண்ணப்பர் வரலாறு முழுவதையும் கூறிவிடுகின்றார். கும்பிட்டப் பயன் காளத்தி மலையிடைச் சென்று, காளத்தி நாதரைக் கீழே வீழ்ந்து வணங்கி எழுந்தாராம் - பிள்ளையார். கூடும் அன்பினில் கும்பிட்ட அப்பெருமானுக்கு, அந்தக் கும்பிடுதலின் பயன் கண்ணப்பர் வடிவில் எதிரே நின்றது என்ற பொருள்பட, "கும்பிட்ட பயன் காண்பார்போல் மெய் வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்’(பெபு-2925) என்று சேக்கிழார் கூறுவது ஒரு மாபெரும் கருத்தை உள்ளடக்கியதாகும். பரஞானம், அபர ஞானம் என்ற இரண்டையும் முழுதுணர் பெருமானாகிய, பிள்ளையார், இந்த