பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 295 இரண்டு சொற்களின் பொருளைக்கூட அறியாத ஒருவரின் வடிவைக் கண்டார். அவ்வடிவு கும்பிடுதலின் பயனாக அமைந்தது என்று சேக்கிழார் கூறுவது பல நாள் சிந்தித்துப் பொருள் காண வேண்டிய ஒரு பகுதியாகும். பக்தியும் சாத்திர சடங்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் சாத்திரம், தோத்திரம் என்ற இரண்டும் வளர்ச்சி அடைந்துவிட்டன. பக்தி இயக்க காலத்தில் (5, 7, 8ஆம் நூற்றாண்டுகளில் சாத்திரத்திற்கு ஒரு மிகச் சிறிய இடமே தரப்பெற்றது. சாத்திரம் கூறும் நியம, நிஷ்டைகள் எதுவும் அக் காலத்தில் முக்கியத்துவம் பெறவில்லை. 8ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, வடமொழி ஆதிக்கத்தாலும் ஸ்மிருதிகளின் தாக்கத்தாலும் தமிழரிடையே சாத்திரங்கட்கு மதிப்பு வளரலாயிற்று. நாவரசர் பெருமான் காலத்தில் இந்தக் கிரியைகளை அவர் சாடுவதைப் பார்த்தால், அவர்கள் காலத்திலேயே சாத்திரங்கள் ஒரளவு செல்வாக்குப் பெற்றிருந்தன என அறிதல் கூடும். * - சாத்திரம், தோத்திரம் ஆகிய இரண்டும் ஒரே பொருளை அடைய வழிவகுக்கும் இணைக் கூறுகள் ஆகும். சாத்திரவழி வாழ்க்கையில் பல கட்டுப் பாடுகளை ஏற்படுத்தி, பல சடங்குகளுக்கு இடம் வகுத்து, அம்முறையில் வாழவேண்டும் என்று