பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 சேக்கிழார் தந்த செல்வம் கூறுவதாகும். என்ன காரணத்தாலோ வேத காலத்திலேயேகூட இந்தச் சடங்குகட்கு அதிக மதிப்புத் தரப்பெற்றுவிட்டது. ரிக் வேதத்தில் பல மண்டிலங்களில் செய்யப்பெறும் வேள்விகள், சடங்குகட்கு முக்கியத்துவம் அளித்தன. அந்த வேதத்தில் சொல்லப்பட்டதைவிட மிகவும் விவரமாகச் செய்யப் படவேண்டிய சடங்குகள்பற்றிக் கூறும் வேதசாகைகள் உடன் இணைக்கப் பெற்றன. இந்த இணைப்புகள் பிராமணங்கள் என்று சொல்லப்படும். நாளாவட்டத்தில் வேதசாலை களைவிடப் பிராமணங்கள் வலுப்பெற்றன. இந்த நிலையில்தான் கண்ணப்பர் இம்மண்ணிடைத் தோன்றினார். வேட்டையாடச் சென்ற அவர் எதிர்பாராது கண்ட காளத்திநாதனைப் பல்லாண்டுகளாக ஆகம ரீதியில் வழிபடும் பழக்கம். உடைய சிவகோசரியார் என்ற அந்தணரும் அதே காலத்தில் வாழ்ந்தவராவார். காழிப்பிள்ளையார் எந்த யாகத்தையும் செய்த தாக வரலாறுகள் இல்லை. ஆனால், அவர் தந்தையார் இவரைப் பிள்ளையாகப் பெற்ற பின்பும் கூட யாகம் செய்வதை விட்டுவிட வில்லை. சடங்குகளில் ஈடுபட்டவர்கள் அதனை விடுதல் இயலாத காரியம். இறைவனே வந்து கனவில் கூறிய பிறகும் சிவகோசரியார் தம்முடைய வழிபாட்டு முறையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. நாளாவட்டத்தில் இந்தச் சாத்திரவாதிகட்கும் பக்தி