பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 297 மார்க்கத்தில் ஈடுபட்டவர்கட்கும் கருத்து வேற்றுமை வளரலாயிற்று. அத்தகைய ஒரு காலத்தை வெளிப் படுத்திச் சாத்திர வழிபாட்டைவிடப் பக்தி வழிபாடு பல மடங்கு உயர்ந்ததாகும் என்பதை எடுத்துக் காட்டவே கண்ணப்பர் புராணத்தைப் பயன் படுத்துகிறார் சேக்கிழார். இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு மனமும், உணர்வும்தான் வேண்டுமே தவிர, கல்வி அறிவு தேவையில்லை என்பது சங்க காலம்தொட்டு இந் நாட்டில் நிலைபெற்ற கொள்கையாகும். திரு முருகாற்றுப்படை இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும். திருவேரகத்தில் வழிபடுகிறவர்கள் ஈர வேட்டி அணிந்துகொண்டு, உச்சியில் கூப்பிய கையினராய், ஆறெழுத்து மந்திரத்தை வாய்விட்டுக் கூடச் சொல்லாமல் மனத்திற்குள் சொல்லிக் கொள்ளும் வேத விற்பன்னர்கள் ஆவர். இதனெதிராகத் திறந்த வெளியில் ஆட்டுக்கிடாய் அறுத்து, அதன் குருதியில் அரிசியைக் கலந்து நாலா பக்கமும் சிதறவிட்டு முருகா என்று ஒலமிடும் பக்தர்கள் ஒருபுறம். இவை இரண்டு காட்சிகளையும் வருணித்த நக்கீரர், வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே (திருமுருகாற்றுப்படை-) என்று பாடுகிறார். அறிவின் எல்லையில் நின்று வழிபடும் திருவேரகத்து அந்தணர்க்கும் அறிவு என்ற சொல்லையே அறியாது முருகனிடம் முழு ஈடுபாடு