பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 : சேக்கிழார் தந்த செல்வம் கொண்டு அவனை அழைக்கும் வேலனுக்கும் முருகப் பெருமான் ஒரே நேரத்தில் அருள் பாலிக்கின்றான். பக்தியும் அன்பும் நிறைந்த இடத்தில் கிரியைகள் தேவைப்படுவதில்லை என்ற அருங்கருத்தைத் திருமுருகாற்றுப்படை மூலம் அறிந்து கொண்ட தெய்வச் சேக்கிழார் அதற்கு ஒரு முழு வடிவு கொடுக்கும் முறையில் கண்ணப்பர் புராணத்தைப் பாடுகிறார். கண்ணப்பர் வரலாறு கூறும் சேக்கிழார் அவர் வழிபாட்டு முறையைக் கூறுகிறார். அவர் வாயில் பொன் முகலி ஆற்றுநீரை கொணர்ந்து இறைவன் மேல் உமிழ்ந்து விட்டு, தன் தலையில் குடிக்கொண்டு வரும் பூவை இறைவன் முடியின் மேல் வைத்து, தான் கொண்டுவந்த இறைச்சியைப் படைத்து, இறைவனை உண்ணுமாறு வேண்டுகிறார். இதேபோல கண்ணப்பருக்கு தெரியாமல் சிவகோசரியாரும் ஆகம முறைப்படி வழிபாடு செய்தார். இவை இரண்டுமே கிரியைகள் அல்லது சடங்குகள் தானே என்று சிலர் வினவலாம். நூலில் விதித்த முறைகளை பின்பற்றி ஒவ்வொரு சடங்கிற்கும் உரிய மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு செய்யும் கிரியைகளே சடங்குகள் எனப்படும். சிவகோசரியார் விபரம் அறியாத திண்ணனார் இறைவன் முடிமேல் உள்ள பூவைகாட்டி இது என்ன என்று கேட்ட பொழுது, உடனிருந்த நாணன் தான் முன்பு ஒருமுறை வந்தபொழுது ஒரு பார்ப்பான் இறைவன் மேல் நீரை ஊற்றி பூவைச் சொறிந்து எதிரே உணவை வைத்து