பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 21 போல இப்பதிகத்தை அடியார் பட்டியல் என்று நினைக்கவில்லை என்ற கருத்து வலிமை பெறுகிறது. எந்த அளவுக்கு இந்தப் பதிகத்தில் அவர் ஈடுபட்டார் என்பதற்கு ஒரே ஒரு சான்றைமட்டும் இங்கே குறிக்கலாம். திருத்தொண்டத் தொகையில் வரும் பதினொரு பாடல்களிலும் வரும் முதலடித் தொடர் களையே தம் பெரியபுராணத்தின் சருக்கப் பெயர்களாகக் கொண்டார். தில்லைவாழ் அந்தணர் சருக்கம், வம்பறா வரிவண்டுச். சருக்கம், இலைமலிந்த சருக்கம் என்பன போன்ற பெயர்கள் மேலே கூறப்பெற்ற பாடல்களின் முதல் தொடர்களாகும். தொண்டர்கள் யார்?. திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் குறிப்பிடும் அடியார்கள் வாழ்வில் குறிக்கோள், இறையன்பு, தொண்டு என்ற் மூன்றும் பொதுவாக நிறைந் திருந்ததைக் கண்டதால்தான் சேக்கிழார் இவர்கள் வரலாற்றைப் பாட் முடிவு செய்தார்' என்று கூறினோம். தொண்டு என்றால் என்ன? என்ற வின்ாவிற்குப் பலர் பலவாறாக விடை கூறுவர். மக்களுக்குச் செய்யும் பணியைத் தொண்டு என்று கூறுவதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டேனும் அதிலும் பல ஐயங்கள் எழலாம். சட்டி கொடுத்தல், கீழ் உடை கொடுத்தல், அழுக்குத் துணியை வெளுத்துக் கொடுத்தல் என்பவையெல்லாம் தொண்டாகும்ர் என்ற வினா எழுவது நியாயமே.