பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 299 ஏதோ முணுமுணுத்தான் என்ற விபரத்தைக் கூறினான். இதைக்கேட்ட திண்ணன், குடுமித் தேவருக்கு இவை எல்லாம் பிடிக்கும் போலும் என்ற எண்ணத்தில் அவற்றை அவன் விரும்பிய முறையில் செய்தான். எனவே, திண்ணன் செய்ததும் வேலன் வெறியாடு களத்தில் செய்யப் பெற்றவையும் சடங்குகள் என்ற பெயரில் அடங்க மாட்டா. திண்ணன்-திண்ணனார் நாணன், காடன் இருவருடன், பன்றியைத் துர்த்திச் சென்ற திண்ணனார். இறுதியாக அதனைக் கொன்ற இடம் காளத்திமலையின் அடிவாரம் ஆகும். அப்பொழுதுதான் மலையினை முதன் முறையாகக் காணுகின்றார் திண்ணனார். இது என்ன மலை என்று உடன் இருந்த நாணனை வினவ, தனக்குத் தெரிந்த விடையை அவன் கூறினான். குடுமித் தேவர் என்பவர் இம்மலைமேல் உள்ளார். நீ விரும்பினால் சென்று கும்பிட்டு வரலாம் என்றான். இருவரும் புறப்பட்டு விட்டனர். அடிவாரத்தில் ஒடும் பொன் முகலி ஆற்றைக் கடந்து, மலையை நோக்கிச் செல்லுகின்ற திண்ணனார் ஒரு விசித்திரமான அநுபவத்தை அடைகிறார். அதன் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத திண்ணன் உடன் வரும் நாணனை நோக்கி, 'ஆவது என்?இதனைக் கண்டு இங்கு அனைதொறும் என்மேல் பாரம்