பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 சேக்கிழார் தந்த செல்வம் போவதொன்றுளது போலும்’ : - - (பெ. பு-746) என்கிறார். அதாவது, மலையை நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்தொறும் அவர்மேல் இருந்த பாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் இருந்ததாம் என்மேல் பாரம் என்று அவர் சொல்வது சாதாரண மனிதர்களுக்குரிய பொறி, புலன்கள் ஆக்கிரமிப்பால் ஏற்படுகின்ற மனச்சுமை ஆகும். அது உடற்சுமை அன்று; மனச்சுமை என்பதைக்கூட வேறுபாடு படுத்திக் காணமுடியாத ஒர் அப்பாவியாக இருக்கிறார் திண்ணனார். படிகளில் ஏறி, குடுமித்தேவரை காண்கின்ற அந்த வினாடிவரை, வேடர்குல மைந்தனாகிய திண்ணன் தான் அங்கே இருக்கிறான். மனச்சுமைகளை இறக்க விரும்பும் எந்த ஒருவனும் தவம், தியானம் முதலியவற்றை மேற் கொண்டு பல்லாண்டுகள் பயின்றால் அந்தச் சுமையைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க முடியும். சுமை இறங்கிய மனம் வெற்றிடமாக இருப்பதில்லை. சுமை இறங்க இறங்க அந்த வெற்றிடத்தை இறையருள் நிரப்புகிறது. பல்லாண்டுகள் பயிற்சி, தவம், தியானம் என்பவற்றின் துணை கொண்டு பெறுகின்ற ஓர் அநுபவத்தைத் திண்ணன், சில மணித் துளிகளில் பெற்றுவிடுகிறான். எனவே, மலையை நோக்கி அவன் நடக்கத் தொடங்கிய