பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 சேக்கிழார் தந்த செல்வம் அவனால் அன்பு செய்யப்பட்ட குடுமித் தேவருக்குப் பசிக்கும் என்று நினைத்து, வேண்டுமான விலங்குகளை வேட்டையாடிக்கொண்டு வந்து, நீ உண்க'என்று கூறிப்படைக்கிறான். அப்படிப் படைக்கப்பட்ட உணவைக், குடுமித்தேவர் ஏன் உண்ணவில்லை என்ற எண்ணம் திண்ணன் மனத்தில் ஏனோ தோன்றவேயில்லை. குடுமித் தேவரே திண்ணன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய இடம் இது. இந்த எண்ணம் திண்ணன் மனத்தில் ஒரு வினாடி முளை விட்டிருக்குமேயானால் இன்னும் அவன் திண்ணனாகத்தான் இருக்கிறான் என்பதற்கு அது அடையாளமாகும். ஆறு நாளும் அவன் படைத்த உணவு அப்படியே கிடப்பது கூட அவன் மனத்தில், 'ஏன் என்ற வினாவையோ இது ஏற்கப்படவில்லை என்ற வருத்தத்தையோ தரவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம்: குடுமித் தேவரைத் தவிர, இரண்டாவதாகத் திண்ணன் என்ற ஒருவன் இல்லை. அவன் வேறு, குடுமித்தேவன் வேறு என்றில்லாத நிலையில் ஏன்? என்ற வினாவை எழுப்புவது யார்? நாகன் மகன் திண்ணன் என்ற ஒருவன், குடுமித் தேவரில் வேறுபட்டுத் தனியே இல்லை என்றால், தினந்தோறும் வேட்டை ஆடியவன் யார்? இறைச்சி நன்றாக வெந்துள்ளதா என்று வாயில் அதுக்கிப் பார்த்தவன் யார்? குடுமித் தேவரிடம் இவற்றை