பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 303 வைத்து, தேனும் உடன் கலந்தது இது தித்திக்கும், உண்க!' என்று கூறினவன் யார்? இவற்றைச் செய்தவன் நாகன் மகன் திண்ணன் என்று கொண்டால், கண்ணப்பர் வரலாற்றை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றாகிவிடும். இருவர் விளக்கம் : சேக்கிழார் மலையிடை இவற்றைச் செய்து கொண்டிருப்பவன் Այmri- என்ற வினாவிற்கு இருவர் விடை பகர்கின்றனர். ஒருவர் தெய்வச் சேக்கிழார். மிக அற்புதமாக அவர் விடை அமைந்துள்ளது. தன்பரிசு (volition), வினை இரண்டு நல்வினை, தீவினை) உயிர்களைப் பற்றிநிற்கின்ற மலம் மூன்று (ஆணவம், கன்மம், மாயை) ஆகிய இவை ஆறும் ஒருவனிடம் இருந்தால்தான் அவன் தனித்துவம் பெற்ற மனிதனாக எண்ணப்படுவான். பொறி, புலன், மனம் ஆகிய அனைத்தும் தொழிற்படாமல் ஆள் மயக்க நிலையில் (Coma stage) உள்ள ஒருவனைத் திண்ணன் நிலையில் உள்ளவன் என்று கூறலாமா என்ற வினாத் தோன்றினால் முடியாது’ என்றுதான் கூற வேண்டும். காரணம், இந்த நிலையில் உள்ளவனுக்குக்கூட மனம், சித்தம், புத்தி ஆகியவை தொழிற்படாவிடினும் அகங்காரம் என்ற காரணம் தொழிற்பட்டுக்கொண்டுதான் இருக்கும். இதை அறிய ஓர் எளிதான வழி உண்டு. ஆழ்நிலை மயக்கத்தில் உள்ள ஒருவனை, எல்லாப் பொறிகளும் செயலிழந்த