பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 சேக்கிழார் தந்த செல்வம் நிலையில் உள்ள ஒருவனை, அவன் பேரைச் சொல்லி கூப்பிட்டால் உடனே 'உம்' என்று பதிலிறுப்பதைக் காணலாம். ஆனால், இந்நிலை ஒரு வினாடியில் நூற்றில் ஒரு பாகம்தான் நிற்கும். எனவே, அந்தக்கரணம் நான்கினும் மிக ஆழத்தில் இருக்கும் அகங்காரத்தைப் போக்க முடியாது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. திண்ணனுக்கு இந்த அகங்காரமும் இல்லை என்பதை நமக்குக் கூறுவதற்காகவே, தன்பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் . إلكيIوز அன்புபிழம்பு ஆய்த் திரிவார் அவர் கருத்தின் . . o - - அளவினரோ!' (டெ. பு-803) என்று கூறுகிறார். இந்த ஆறும் இல்லை என்றால் திண்ணன் என்ற வடிவில் வேறு என்ன இருந்தது என்ற வினாத் தோன்றுமல்லவா? அதற்கு விடை கூறுபவர் போல, அன்பு பிழம்பாய் திரிவார்’ என்று கூறுகிறார். அன்புப் பிழம்பு என்றால், அது சிவம் என்றே பொருள்படும் என்ற கருத்தை, அன்பு சிவம் இரண்டென்ப அறிவிலா அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் - : (திருமந் : 270)