பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 305 என்ற திருமூலர் வாக்கால் அறியலாம். பிற்காலத்து தோன்றிய சாத்திர வழிநின்று இதைக் கூற வேண்டுமானால், திண்ணன் என்பவனுடைய பசு’ கரணங்கள் அனைத்தும் ஒய்ந்து, அவை பதி கரணங் களாக மாறிவிட்டன. இப்பொழுது, திண்ணன் செய்கின்ற செயல்களுக்கு அவன் பொறுப்பில்லை. 'சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் (திருத்தோனோக்கம் 6)என்ற மணிவாசகரின் அனுபவ விடை இதற்குச் சான்றாகும். திண்ணனின் இந்த நிலையைத் தேகப் பிரக்ஞை உடல் உணர்வு) அற்ற நிலை என்பர், தங்களுக்கென்று ஓர் உடம்பிருக்கிறது. அதற்கென்று சில தேவைகள் உண்டு என்ற நினைவே இவர்கள் மாட்டு இருப்பதில்லை. அண்மையில் திருவண்ணா மலையில் வாழ்ந்த மகான் சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றி அவர் காலத்திலும் அவருக்குப் பின்னரும் வாழ்ந்த ரமண மகரிஷி நினைவுகூரலாம். "தேகப்பிரக்ஞை இல்லாமல் சேஷாத்திரி சுவாமிகள் ஒருவரால்தான் வாழ முடியும்” என்று ரமணர் கூறியதை இங்கு நினைவுகூர்தல் நலம். s . இருவர் விளக்கம் : குடுமித்தேவர் "இப்பொழுது, இவன் யார்? ” என்ற வினாவிற்கு விடை இறுத்த இரண்டாமவர் குடுமித்தேவரே ஆவார். சிவகோசரியார் கனவிடைத் தோன்றிய பெருமான்,