பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 சேக்கிழார் தந்த செல்வம் "அவனுடைய வடிவு எல்லாம் நம்பக்கல் அன்பு என்றும் அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு ‘. - எனறும அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் - * - ! . என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள் - செய்தார். ' (பெ. பு-806) திண்ணனின் வடிவு, செயல், அறிவு என்ற மூன்றும் தம்மைப்பற்றியே என்று குடுமித்தேவர் கூறிவிட்டதால், திண்ணனுக்குத் தேகப் பிரக்ஞை இல்லை என்பதை அறிவித்தாராயிற்று. திண்ணன், கண்ணப்பனாகின்ற நிலை. அவன் குடுமித்தேவரைக் கண்ட முதல் நாளே நிகழ்ந்துவிட்டது. ஒருகணம் : தேகப் பிரக்ஞை இந்த ஆறு நாளும், தன்பரிசு, வினை இரண்டு முதலியவற்றை இழந்து, குடுமித்தேவரைக் காவல் புரியும் ஒருவனாக விளங்கிய திண்ணனாருக்கு, ஒரு வினாடி நேரம் தன்பரிசு (தேகப்பிரக்ஞை) தோன்று மாறு அருள்புரிகின்றார் குடுமித்தேவர். குடுமித் தேவரைத் தவிரத் தன்னையே மறந்துநின்ற ஒருவன், அவர் கண்ணில் குருதி வடிந்தால் கட்டிக்கொண்டு அழுவானே தவிர வேறு ஒன்றும் செய்யமாட்டான். தன் உடம்பு (தேகப் பிரக்ஞை) என்ற ஒன்று இருந்தாலொழிய, குடுமித்தேவருக்குத் தன் கண்ணை