பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 307 இடந்து அப்பவேண்டும் என்ற எண்ணம் தோன்றி இராது. அந்த எண்ணத்தைத் தோற்றுவித்தால், விளைவு இரண்டு வகையில் செல்லலாம். ஒன்று, வளர்ந்துவிட்ட நிலைமையில் இருந்து வழுக்கி, கீழே சென்று நாகன் மகன் திண்ணனாக மாறிவிடலாம். அல்லது, அந்த ஒரு வினாடி தேகப் பிரக்ஞை நின்ைவைப் பயன்படுத்திக்கொண்டு, ஊனுக்கு ஊனிடல் வேண்டும் (பழுதடைந்த உறுப்பிற்கு அதே போன்ற மற்றோர் உறுப்பை மாற்றாக (Transplantation) பயன்படுத்த வேண்டும் என்ற நினைவு வரலாம். திண்ண்னார் தம் கண்ணை இடந்து குடுமித் தேவருக்கு அப்பினான். திண்ணனாரைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டாவது வழியையே மேற்கொள்வான் என்று அறிந்த குடுமித்தேவர், திண்ணனுக்கு உடல் உணர்வை ஏற்படுத்தினார். ஒரு போலி விளக்கம் கண்ணப்பர் வரலாற்றில் உள்ள இந்த நுணுக்கத்தை ஆழ்ந்து சிந்திக்காமல் சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப் பேரறிஞர் ஒருவர், திண்ணன் கண்ணை இடந்ததற்கு ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆறு நாளும் திண்ணன் பன்றி, மான் முதலியவற்றை வேட்டையாடி அம்பினால் குத்திக் கொன்றான் ஆதலால், அதற்குத் தண்டனையாக அவன் கண்ணைத் தோண்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுவே அவர் தந்த விளக்கம். .