பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 சேக்கிழார் தந்த செல்வம் சேக்கிழாரையோ, திண்ணனாரையோ அறிந்து கொள்ளாமல் மிகச் சாதாரணமான வினைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய விளக்கமாகும் இது. இவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டால், முத்தநாதன் மெய்ப்பொருளைக் குத்தினான் என்றால், அதற்கு முன்னர் மெய்ப் பொருள் யாரையோ குத்தியிருக்க வேண்டும் என்று விடைகூற நேரிடும். தன்பரிசு, வினை இரண்டு’ என்ற பாடலில் உடல் உணர்வு அற்ற நிலையில், திண்ணன் வாழ்ந்ததை நுணுக்கமாக எடுத்துக் கூறியுள்ளதைச் சிந்திக்காவிட்டால் இப்படிப்பட்ட தவறுகள் செய்ய நேரிடும். நிலை இரண்டு, அனுபவம் ஒன்று கலைஞானம், மெய்ஞ்ஞ்ானம் என்பவற்றை இறையருளால் ஒரே கணத்தில் பெற்று, ஞான வடிவினராய் வாழ்ந்த காழிப்பிள்ளையாரைக் கூற வந்த சேக்கிழார், "ஞானத்தின் திருஉருவை நான்மறையின் * ^ - 、 ... * * - தனித்துணையை" (பெ. பு-263) என்று பாடுகிறார். கலைஞானம், மெய்ஞ்ஞானம் என்பவை ஓரளவு அறிவின் துணைகொண்டு பெறவேண்டியவை ஆகும்.