பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சேக்கிழார் தந்த செல்வம் பசித்தவர்க்கு உணவு கொடுத்தல், நோய் உற்றவர்க்கு மருந்து கொடுத்தல் என்பன தொண்டு என்று கொள்ளப்படுவன போலவே மேலே சொன்னவையும் தொண்டு எனக் கொள்ளப்பட வேண்டும். தொண்டு மனப்பான்மைதான் முக்கியமானதே தவிர அத் தொண்டு எவ்வாறு செய்யப்பட்டது என்பது முக்கியமல்ல. இவற்றையாவது ஓரளவு ஒத்துக் கொள்ளலாம். ஆனால், திருக்கோயிலில் அலகிடுதல், ம்ெ.ழுகுதல், புல் செதுக்குதல், சாம்பிராணி போடுதல், குங்கிலியப் புகை போடுதல், நந்தவனம் வைத்தல் முதலியவை எவ்வாறு மக்கள் தொண்டாகும் என்ற வினாத் தோன்றின் அது சரியே ஆகும். ஆழ்ந்து சிந்தித்தால் இவையும் மக்கள் தொண்டு என்றே கொள்ள முடியும். . . . . . . . . . . - திருக்கோயில் என்பது எல்லா நேரங்களிலும் பலரும் வந்து கூடி வழிபடுவதற்குரிய இடமாகும். வருபவர்கள் எத்தகையவர்கள் என்று கூற முடியாது. எளியர், செல்வர், இளைஞர், முதியவர்வரை அனைவரும் வருவர். அவருள் நோய் உடையவர் களும் வருதல் கூடும். பலரும் கூடும் இடத்தில் அந்த இடம் மாசுபடுவது இயல்பே ஆகும். மேலும் தமிழர்களுடைய கோயில்கள், மண்டபங்கள், பிராகாரங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பினும் அர்த்த மண்டபம், கருவறை என்பவை மூன்று பக்கங் களிலும் முடியே இருக்கும். இப் பகுதியினுள் பலர்