பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 309 இவை இரண்டாலும் எந்த இறை அனுபவத்தைப் பெற முடியுமோ அதே இறை அனுபவத்தை இவை இரண்டின் உதவி இல்லாமல் அன்பின் துணை கொண்டு அடைய முடியும் என்பதை விளக்கவே கண்ணப்பர்புராணம் விரிவாகப் பாடப்பெற்றது. அறிவின் துணை கொண்டு ஆண்டவனை வழிபட்ட சிவகோசரியார், இறைவனைக் காண இயலவில்லை. அறிவின் துணையே இல்லாமல், உணர்வின் துணை ஒன்றையே கொண்டு குடுமித் தேவரை வழிபட்ட திண்ணனார் ஆறாவது நாளில் இறையோடு கலந்தார் என்பதைக் கூறுவதன்மூலம் இந்நாட்டினர் கண்ட பக்தி மார்க்கத்தின் சிறப்பைக் காட்டுகிறார் சேக்கிழார். * , , திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரர், ஒரு சில அடியார்களுக்கு அடைமொழி தந்து அவர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இரண்டு நம் கவனத்தை ஈர்ப்பனவாகும். தண்டிஅடிகள் என்ற பெயரைக் கேட்டவுடன் இவர் பிறவிக் குருடர் என்ற எண்ணம் நம் மனத்தில் தோன்றும். அவரைக் குறிக்க வந்த சுந்தரர், நாட்டமிகு தண்டி’ என்று கூறுகிறார். நாட்டம் என்ற சொல் புறக்கண் பார்வை, அகக்கண் பார்வை என்ற இரண்டையும் குறிக்கும். அடுத்த படியாக பரம்பரை முழுவதும் கல்வி வாசனையே இல்லாத - கண்ணப்பரை குறிக்கும்பொழுது கலை மலிந்த சீர் நம்பி