பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 சேக்கிழார் தந்த செல்வம் கண்ணப்பன்' என்று கூறுவது நம் சிந்தனையைத் தூண்டுவதாகும். கல்வி வாசனையே இல்லாத ஒருவரை கலைமலிந்தவர் என்று கூறுவது பொருந்துமா? இத்தகைய ஒரு வினா நம் மனத்தில் தோன்றுவது போல தெய்வச் சேக்கிழார் மனத்திலும் தோன்றி இருக்க வேண்டும். - நம்மைப் போன்ற சாதாரண மனிதராக இல்லாமல் இறையருள் பெற்றவராக சேக்கிழார் இருந்தமையின் சுந்தரமூர்த்தி ". சுவாமிகளின் 'கலைமலிந்த என்ற சொற்றொடர்க்கு அவரால் பொருள் காண முடிந்தது. இதனைச் சற்று சிந்திப்பது பயனுடையதாகும். கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப்பெறினும் அவற்றுள் மிக இன்றியமையாத சிறப்புடன் விளங்குவது கல்விக் கலையாகும். இக்கலைகளை கற்பதன் நோக்கம் யாது?. கல்வி முதலிய கலைகள் அவற்றைப் பெற்றிருப்பவர்க்கு சிறப்பையும், புகழையும் நல் வாழ்வையும் தரும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. சிறப்பாக கல்விக்கலை இவற்றை எல்லாம் தருகின்றது என்பதில் ஐயமில்லை. - - இவற்றை அல்லாமல் இக்கல்விக்கலை வேறு பயன் எதனையேனும் தருகின்றதா என்ற வினாவை எழுப்பினால் ஒரு விடை கிடைக்கும். இதனை திருநாவுக்கரசர் புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பின்வருமாறு விளக்கமாக கூறுகிறார். - -