பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 311 பொருள் நீத்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள் நீக்கி மலர்விக்கும் கலைபயிலத் தொடங்கு வித்தார். - (பெ. பு-1290) இதன்படி நிறைந்த பொருளைச் செலவழித்துக் கலை பயின்றார் என்று கூறுகிறார். அவ்வாறு கூறும் பொழுது கலைஞானத்திற்கு ஈடு இணையற்ற முறையில் ஓர் இலக்கணம் வகுக்கிறார் சேக்கிழார். சேக்கிழார் கருத்துபடி கலைஞானமானது, புலன் கொளுவ-அறிவை கருவியாகப் பற்றிக் கொண்டு, மனம் முகிழ்த்த சுருள்-விரிவடையாமல் சுருண்டு தன்னைத் தானே பற்றி நிற்கின்ற மனத்தை அச்சுருள் நீங்குமாறு செய்து விரிவடையச் செய்யும் கலை பயின்றார் என்று கூறுகின்றார். உணர்வுக்கு இடமான மனத்தில் கலைஞானம் தொடக்கத்தில் இடம் பெறுவதில்லை. எல்லாக் கலைகளும் அறிவின் மூலம் பல்கால் பயின்று பெறப்படுவன ஆதலின், 'புலன் கொளுவ’ என்றார் கவிஞர். அவரவர் அறிவின் சிறப்பிற்கும், கூர்மைக்கும் ஏற்ப ஒரே முறையிலோ, பல முறையிலோ பயின்று பெறப்படுவது கலைஞானம், அதனால் தான் புலன் கொளுவ என்றார். -. இனி, இவ்வறிவின் வேறுபட்டு உணர்வுக்கு இடமாய் இருக்கும் மனம் மனிதர்களைப் பொறுத்த மட்டில் பெரும்பாலும் விரிவடைவதில்லை. காரணம்