பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 313 கலையின் பயன் என்ன என்பதை ஒருவாறு அறிந்து விட்டோம். கலையின் பயன் உணர்வுகளுக்கு இடமாகிய மனம் விரிவடைந்து உலகில் உள்ள அனைத்தையும் ஒன்றாக காணும் சமதிருஷ்டி பெறுவதே கலைஞானம் தரவேண்டிய பயனாகும் என்பது புலனாயிற்று. இந்தப் பயனை கலைஞானத்தின் மூலம் பெறலாம் என்பது முதல் வழி என்று கூறினோம். இவ்வழியில் சென்று இதனைப் பெற்றவர்கள் நாவரசர் போன்றவர்கள். - இதன் மறுதலையாக, அறிவின் துணை கொண்டு கலைகளைக் கற்று இப்பயனை பெறாமல், தொடக்கத்திலேயே இப்பயனைப் பெற். ஒரு சிலர் உலகிடை உண்டு. இராமகிருஷ்ண பரமஹம்சர், இயேசுநாதர், திருஞானசம்பந்தர், கண்ணப்பர் முதலானவர்கள் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். கலைஞானத்தில் உதவி இல்லாமலேயே மனம் முகழ்த்த அருள் நீங்கப் பெற்றவர்கள் இப் பெருமக்கள். இவ்வாறு பெறுவது ஒரு சில பெருமக்களுக்கு முடிந்தது என்பதைக் கூற வந்த சேக்கிழார், திருஞானசம்பந்தர் புராணத்தில் இதனை விவரிக்கின்றார். உவமை இலாக்கலைஞானம் உணர்வு அறிய - மெய்ஞ்ஞானம்