பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314. சேக்கிழார் தந்த செல்வம் தவம்முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்’’ - r (பெ. பு-1973) இப்பாடலின் படி பார்த்தால், உவமை இலாக் கலைஞானமும், அதன் பயனாக மனத்திடை தோன்றுகின்ற உணர்வரிய மெய்ஞ்ஞானமும் ஒரே வினாடியில் காழிப்பிள்ளையாருக்கு கிடைத்தது என்று கூறுகிறார். இவை அறிவின் துணை கொண்டு கற்றுத் தேர்ந்தமையால் கிடைத்தது அன்று என்பதை வலியுறுத்துவதற்காகவே, தாம் உணர்ந்தார்’ என்று மனத்தின் செயலாக இதனைக் கூறுகிறார் கவிஞர். இதுவரை கூறியவற்றால் உண்மையான கலை ஞானம் இறைஅடி போற்றும் மெய்ஞ்ஞானத்தை தரும் இயல்புடையது என்பதை அறிகிறோம். கலை ஞானத்தின் பயனாக உள்ள மெய்ஞ்ஞானத்தை ஒருவர் பெற்றுவிட்டார் என்றால், ஒன்று கலைகளைப் பயின்று அதனைப் பெற்றிருக்க வேண்டும். இன்றேல், கலைகளைப் பயிலாமலேயே இறைஅருளால் இம் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்து இருக்க வேண்டும். கண்ணப்பர் இந்த வகையைச் சேர்ந்தவர் ஆதலால், 'கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்று கூறுகிறார் சேக்கிழார். ó@@@ö