பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. இளமை துறந்தார் பெரியபுராணத்தில் காணப்பெறும் ೯TEುಖT அடியார்களும் இறையன்பு, குறிக்கோள் என்ற இரண்டிலும் தளராத ஊக்கமுடையவர்களாய் வாழ்ந்தார்கள் என்பதை அறிகிறோம். அப்பூதி அடிகள், திருநீலநக்கர், பெருமிழலைக்குறும்பர், உருத்திரபசுபதி போன்றவர்கள் தாம் மேற்கொண்ட வாழ்க்கையில் எவ்வித எதிர்ப்பையும் சந்திக்காமல் அதே நேரத்தில் தம் குறிக்கோளிலிருந்து தளர்ந்து விடாமல் வாழ்ந்து இறையடி அடைந்தவர்கள் ஆவார்கள். சிறுத்தொண்டர், கண்ணப்பர், இளையான்குடிமாறர், கணம்புல்லர் போன்ற அடியார்கள் மிகச் சிறிய தடையையோ அன்றி மிகப் பெரிய தடையையோ சந்தித்து அதில் வெற்றி கொண்டு, உலகம் காணுமாறு தாம் பெற்ற வெற்றியை நிலைநாட்டினர். இவர்கட்கு வந்த சோதனை என்று கூறுவதைவிட, இவர்கள் குறிக்கோள் பயணத்தில் எதிர்பட்ட தடையாகும் இது என்று கூறினால் தவறில்லை. மகனைக் கறி சமைப்பதும், கண்ணை இடந்து அப்புவதும், பல நாள் உணவின்றி இருந்தும் பகலில் வித்திய செந்நெல் முளையை வாரிக் கொண்டுவந்ததும், தன் கூந்தலை விளக்கிலிட்டு எரிப்பதும் அன்ைவரும் காணக்கூடிய முறையில் நிகழ்ந்த தடைகளாகும். -