பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 சேக்கிழார் தந்த செல்வம் வேறு வகைப்பட்ட சோதனை இவை இரண்டும் தொகுப்பிலும் அடங்காத ஒரு சோதனை அல்லது தடை ஒருவருக்கு வந்தது. அதனை எவ்வாறு அவர் எதிர்கொண்டார்? எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதைக் காண்பது பயன் உடைய செயலாகும். . மனைவியார் ஊடல் பழைய தில்லையம்பதியில் சட்டி, பானை செய்து விற்கும் வேட்கோவர் குடியில் பிறந்தவர்; உலோகத்தால் செய்யப்பெற்ற பண்ட பாத்திரங்கள் அதிகம் புழங்காத அந்நாளில் அனைத்துச் செயல்களும் மண் சட்டிகளிலேயே செய்யப் பெற்றன ஆதலால் சட்டி, பானை செய்பவர்களுக்கு நன்றாக வாணிபம் நடைபெற்ற காலம். அக்குடியில் பிறந்த ஒருவர், சிவபக்தியில் மேம்பட்டவர், சிவனடியார் கட்குத் தேவையான திருவோடு செய்து தருவதில் அதிக நாட்டம் கொண்டிருந்தவர். எல்லா வளங்களையும் பெற்றிருந்த அவர், சிவ பெருமான் இடத்து நீங்காத பக்தி கொண்டிருந்தாலும் அவனுடைய திருநீலகண்டத்தையே மிகவும் போற்றி வழிபட்டுவரலானார். அதற்கொரு காரணத்தையும் சேக்கிழார் கூறுகிறார். கடலில் புறப்பட்ட நஞ்சு, அகில புவனங்களையும் அழித்துவிடுமோ என்று அஞ்சிய நிலையில், சிவன் நஞ்சை குடித்துவிட்டார்.