பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் . 317 அது அவருள்ளே செல்லாமல், கழுத்திலேயே தங்கிவிட்டது. அவருடைய செம்மேனியில் கருநஞ்சு நிலைத்துவிட்டமையின், அந்தக் கருமை, நீலம் என்று அழைக்கப்பட்டது. நீலகண்டன் என்ற காரணம் பெரிதும் இறைவனுக்கு நிலைக்கலாயிற்று. இளமைத் துடிப்பு மேட்டுக்குடி மக்களுக்குரிய செல்வம் தட்டிக் கேட்க ஆளில்லாத ஒரு சூழ்நிலை, இந்த நிலையில் வாழ்ந்தவர் திருநீலகண்டர் ஆதலால், தவறு செய்ய வாய்ப்பும் நிரம்ப இருந்தது. - அழகிய இளம் மனைவி வீட்டில் இருக்கவும், அந்தப் பெண்ணின்பத்தை வெளியே நாடினார், இவருடைய செயல் மனைவியார்வரை எட்டி விட்டது. அந்தக் காலத்தில், திருநீலகண்டரின் இச்செயல் புதுமையானது என்றோ, பெருந்தவறு என்றோ யாரும் கருதவில்லை. - பிறர் எங்ங்ணம் கருதினார்களோ தெரியாது, ஆனால், திருநீலகண்டரின் மனைவியார் இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அதிர்ச்சி பெற்றுவிட்டார். சாதாரணமாகக் கணவன் மனைவியரிடையே ஊடல் தோன்றுவதும் அதன் தரத்திற்கேற்பச் சில பல நாட்கள் நீடிப்பதும் பின்னர் அவ்ஊடல் மறைவதும் இவ்உலக இயற்கையேயாம். இத்தகைய ஊடல் எக்காரணம் பற்றியும் வரலாம். காரணமின்றியும் வரலாம். வாழ்க்கைச் சுவையூட்டுவதற்காகவே