பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 சேக்கிழார் தந்த செல்வம் தோன்றுவ தாதலின், உப்பு அமைந்தற்றால் புலவி என்கிறான் வள்ளுவன். அதாவது, ஒருசாப்பாட்டிற்கு உப்பு எவ்வளவு தேவையோ அதுபோல் புலவியும் அதாவது - ஊடலும் சிறந்த வாழ்க்கைக்குத் தேவையானதாகும். . . திருநீலகண்டரின் மனைவிக்கு வந்த ஊடல் ஆழமானதாகும். தன்னை விட்டுவிட்டுக் கணவன் வேறொருத்தியிடம் சென்றான் என்றால் அது தனக்கிழைக்கப்பட்ட அவமானம், என்றுதான் மனைவி நினைப்பாள். ஆனால், இவர் தம்மைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், பெண் குலத்திற்கே இழைக்கப்பட்ட அவமானம் என்று நினைத்து விட்டார். ஒரு பெண்ணுக்குச் செய்யப்பட்டாலும் நூறு பெண்களுக்குச் செய்யப்பட்டாலும் மான பிரச்சினை ஒன்றுதான். தம்மைவிட்டுக் கணவன் வேறொருத்தியை நாடியதால் தம்முடைய மானம் மட்டும் போனதாக அவர் கருதவில்லை. பெண்குலம் முழுவதற்கும் மானம் போய்விட்டதாகவே கருதினார். இந்த எண்ணம் அவருடைய ஆழ்மனத்தில் நிறைந்து இருந்தமையால்தான் பின்னர், ‘என்னைத் தொடாதீர்!’ என்று சொல்வதற்குப் பதிலாக எம்மை’ என்று கூறிவிடுகிறார். தப்புக் கணக்கு சாதாரண ஊடலாக இருப்பின் அம்மகளிர் எவ்விதப் பணியையும் நிறைவேற்றாமல் முடங்கிக் கிடப்பர்.