பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் 319 பிறருடைய கவனத்தைக் கவர்தற்கு இது தக்க வழியாகும். ஆனால், திருநீலகண்டரின் மனைவியோ, தம்முடைய ஊடற்காலத்திலும் செய்யவேண்டிய பணி அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்தார். அவருடைய பெண் உணர்வு அவமானப்படுத்த பட்ட்மையின், மனைவியாக இருக்க மறுத்துவிட்டார். இப்படிச் சில நாட்கள் செல்லுகின்றன. திருநீல கண்டரைப் பொறுத்தமட்டில் மனைவியாரின் கோபம் நாளாவட்டத்தில் கணிந்துவிடும் என்று கருதிக் காத்திருந்தார். அம்மையார் சினம் தணிவதாக இல்லை. மானம் போய்விட்டது என்று கருதியதால் வந்த சினம். போன மானம் திரும்பிவரப் போவதில்லை, ஆதலால் அவருடைய சினமும் தணிவதற்கு வாய்ப்பே இல்லை. அம்மையாரின் மனவேறுபாட்டின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாத திருநீலகண்டர் நாட்கள் செல்லச் செல்ல மனைவியின் சினம் தணிந்துவிடும். என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டார். 'திருநீலகண்டம்’ அதன்பயனாக, ஒருநாள் மனைவியிடம் நெருங்கிப் பல் வேண்டுதல்களைக் கூறி அவரை அணை வதற்காக நெருங்கியவுடன் சற்றும் எதிர் பாராத ஒரு நிகழ்ச்சி அங்கு நடை பெற்று விட்டது. திருநீலகண்டரைப் பார்த்து, அவருடைய மனைவியார், - - *